
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வரும் நிலையில், தற்போது சரத்குமார் - ராதிகாவின் செல்ல மகன், ராகுல் சரத்குமார், தன்னுடைய 16 வயதிலேயே பாப் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் இவர் பாடியுள்ள 'ரா சன் டேக் ஆப்' என்கிற பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். யூடியூபில் வெளியாகியுள்ள இந்த பாடலை பார்த்து விட்டு பலரும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக பெற்றோர் இருவரும் நடிகர்களாக இருக்கும் நிலையில், நடிகர் ராதிகா சரத்குமாரின் மகன் பாப் பாடலை தேர்வு செய்து பாடி அசத்தியுள்ளார்.
நடிகை ராதிகா மற்றும் அவருடைய கணவர் சரத்குமார் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பின் இணைத்து நடித்த, 'வானம் கொட்டட்டும்' திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, வரலட்சுமி, ராதிகா, மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து 'பிறந்தால் பராசக்தி' என்கிற படத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.