“விஷால் ஏமாற்றியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்”... மோசடி புகாரில் சிக்கிய பெண் கணக்காளர் அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 5, 2020, 12:52 PM IST
Highlights

விஷால் வரி ஏய்ப்பு செய்தது வெளியே தெரியாமல் இருக்க தான் தன் மீது மோசடி புகார் கூறியதாகவும், இது தொடர்பாக தன்னை மிரட்டி வருவதாகவும் ரம்யா தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால், தன்னுடைய தந்தையை தொடர்ந்து, சில படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். விஷால் பிலிம் பேட்டரி என்கிற பெயரில் இயக்கும் இந்த நிறுவனம், சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ளது. இதில், சாலிகிராமத்தை சேர்ந்த ரம்யா என்கிற பெண் கணக்காளராக கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் பேட்டரி வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகை, காணாமல் போவதாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து, சோதனை செய்ததில், கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகையை தன்னுடைய கணவர் வங்கி கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கி  கணக்கிற்கும் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்... மோப்ப நாயுடன் திடீர் சோதனை....!

இதை தொடர்ந்து விஷால் பிலிம் பேட்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் மோசடி செய்த ரம்யாவை கைது செய்ய வேண்டும் என்றும், 45 லட்ச ரூபாயை பெற்று தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 

 

ஆனால் விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விஷால் அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்களை திரட்ட போதும் தான் அந்த பெண் பணம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரம்யாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

விஷால் வரி ஏய்ப்பு செய்தது வெளியே தெரியாமல் இருக்க தான் தன் மீது மோசடி புகார் கூறியதாகவும், இது தொடர்பாக தன்னை மிரட்டி வருவதாகவும் ரம்யா தெரிவித்துள்ளார். தன் வீட்டிற்கே வந்து மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், விஷால் அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்துக்கள் நடப்பதாகவும் அடுத்தடுத்து பகீர் தகவல்களை அவிழ்த்துவிட்டுள்ளார். போலீசார் தனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால் அரசு தரப்பிடம் விஷால் நிறுவனம் சம்மந்தப்பட்ட அனைத்து கணக்குகளையும் ஒப்படைக்க தயார் என்று அறிவித்துள்ளார். 

click me!