"மயக்க மருத்து கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டார்கள்"... பிரபல பாடகியின் பகீர் இன்ஸ்டாகிராம் பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 28, 2020, 12:25 PM IST
"மயக்க மருத்து கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டார்கள்"... பிரபல பாடகியின் பகீர் இன்ஸ்டாகிராம் பதிவு...!

சுருக்கம்

நீண்ட நாட்களாக  ஆளையே காணவில்லையே என்று ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருந்த நிலையில், டஃபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

கிராமி விருது பெற்ற பிரபல இங்கிலாந்து பாடகி டஃபி, இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரது முதல் ஆல்பமான ராக் ஃபெரிக்கு 3 ப்ரிட் விருதுகள் மற்றும் கிராமி விருது கிடைத்தது. அதன் பின்னர் புகழின் உச்சத்தில் இருந்த டஃபி திடீரென எவ்வித தகவலும் இல்லாமல் போனார். இதனால் ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர். நீண்ட நாட்களாக  ஆளையே காணவில்லையே என்று ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருந்த நிலையில், டஃபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

இதையும் படிங்க:  நயன்தாரா இடத்திற்கு துண்டு போடும் அனிகா... முன்னணி நடிகைகளையே தெறிக்கவைக்கும் போட்டோ ஷூட்...!

அதில், இதை எப்படி எழுதுவது என்று பல முறை யோசித்தேன். தற்போது ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை. எனக்கு என்ன ஆகிவிட்டது, நான் ஏன் திடீர் என்று காணாமல் போய்விட்டேன் என்று பலர் வியந்திருக்கலாம். ஒரு செய்தியாளர் என்னை தொடர்பு கொண்டார். அவர் எப்படியோ என்னை தொடர்பு கொண்டார், அவரிடம் எனக்கு நேர்ந்தது அனைத்துயும் சொல்லிவிட்டேன். ஆம், நான் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்... சில நாட்கள் அடைத்து வைக்கப்பட்டேன். அதை எல்லாம் தாண்டி வந்துவிட்டேன். அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வர நேரம் தேவைப்பட்டது. 

இதையும் படிங்க:  "அத நினைச்சாலே பக்குன்னு இருக்கு"... அடடே ராதிகா ஆப்தே இதுக்கு எல்லாம் பயந்தவங்களா?

நான் என் வலியை பாடல் மூலம் வெளிப்படுத்த விரும்பவில்லை. என் கண்களில் இருந்து சோகத்தை யாருக்கும் காட்ட விரும்பவில்லை. இதயம் நொறுங்கியிருக்கும் போது எப்படி பாட முடியும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதன் பின்னர் என் இதயம் மெதுவாக சரியானது. விரைவில் பேட்டி அளிக்கிறேன். உங்களது கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கின்றேன். என் மீது இத்தனை ஆண்டுகளாக கொண்ட அன்பிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!