நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல! மனோபாலாவை புலம்ப வைத்த நெட்டிசன்கள்!

Published : May 16, 2021, 05:54 PM IST
நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல! மனோபாலாவை புலம்ப வைத்த நெட்டிசன்கள்!

சுருக்கம்

இயக்குனரும் காமெடி நடிகருமான மனோ பாலா, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு தாறுமாறாக காமெண்ட்ஸை நெட்டிசன்கள் போட பதறியடித்து கொண்டு பதில் கொடுத்துள்ளார்.  

இயக்குனரும் காமெடி நடிகருமான மனோ பாலா, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு தாறுமாறாக காமெண்ட்ஸை நெட்டிசன்கள் போட பதறியடித்து கொண்டு பதில் கொடுத்துள்ளார்.

துணை இயக்குனராக இருந்து,  பின்னர் இயக்குநர்,  தயாரிப்பாளர்,  காமெடி நடிகர் என திரையுலகில் பல்வேறு திறமைகளுடன் விளங்குபவர் மனோ பாலா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில்க் சுமிதா, நாகேஷ், அஜித், விஜய் என ஸ்டார் நடிகர்கள் முதல் தற்போதைய யங் ஹீரோக்கள் படம் வரை நடித்து விட்டார்.  

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சினிமா, அரசியல் என அனைத்தை பற்றியும் தன்னுடைய மனதில் பட்ட கருத்துகளை தெரிவிப்பவர். திரைப்படங்கள் பற்றிய பல அப்டேட்டுகளையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவர் எவ்வித கேப்ஷனும் இன்றி.... படுத்திருப்பது போல் ஒரு புகைப்பதற்கு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர், என்ன சார் உங்களுக்கு உடம்பு சரி இல்லையா.. ? என கேட்க துவங்கி கொரோனாவா, அல்லது வேறு எதாவது, என நோண்டி நோண்டி கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல், விரைவாக குணமாக வாழ்த்துக்கள் என தெரிவித்தனர். நெட்டிசன்கள் இந்த பதிவுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோ பாலா, உடனடியாக விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அதில்... என் அன்பு மக்களே...நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை...அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.. என தெரிவித்துள்ளார். இவரது பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?