பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனாவா..? அதிர்ச்சி தகவல்!

Published : May 16, 2021, 03:19 PM IST
பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனாவா..? அதிர்ச்சி தகவல்!

சுருக்கம்

பூந்தமல்லி அருகே நடைபெற்ற மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பூந்தமல்லி அருகே நடைபெற்ற மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதே போல், இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளும் தற்போது பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனாவின் முதல் அலை சற்று கட்டுக்குள் வந்த பின், மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி துவங்க பட்டது. இதனை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தொகுத்து வழங்கி வருகிறார். 

சுமார் 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி, ஃபைனலை நெருங்கி வருகிறது. அதே நேரத்தில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், தினமும் பல்வேறு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றிவந்த 6 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி, தற்போது பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்குங்கள் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. தினம் தோறும் இவர்களுக்கு உடல் சூடு சரிபார்ப்பது, மற்றும் இரும்பல், சோர்வு, ஜலதோஷம் போன்றவை இருக்கிறதா என பரிசோதனைக்கு பின்பே தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதே போல் வாரத்தில் ஒரு முறை கண்டிப்பாக கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள படுகிறது.

இப்படி பரிசோதனனை மேற்கொள்ளப்பட்ட போது எவ்வித அறிகுறியும் இன்றி.. 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியேற்ற பட உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?