
கோலிவுட்டில் திரையுலகைப் பொறுத்தவரை அடுத்தடுத்த மரணச் செய்திகள் வெளியாகி திரையுலகினரை நிலைகுலைய வைத்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி காலமானார். அந்த பெருஞ்சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்னதாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
அதனைத் தொடர்ந்து பிரபல காமெடி நடிகரான பாண்டு கடந்த 6ம் தேதி கொரோனாவால் மரணமடைந்தார். மே 11ம் தேதி ‘கிணத்தைக் காணோம்’ காமெடி புகழ் நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்தார். ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர் மாறன் இரு தினங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியானார்.
இதைத் தவிர ‘ஒவ்வொரு பூக்களுமே’ புகழ் கோமகன்,‘என்னடி முனியம்மா’ பாடல் புகழ் தெம்மாங்கு பாடகர் மற்றும் நடிகரான டி.கே.எஸ் நடராஜன். மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் செல்லதுரை என பட்டியல் நீண்டு மன பாரத்தை கூட்டியது.
சற்று நேரத்திற்கு முன்பு கூட சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமைராஜா ஆகிய படங்களில் காமெடி ரோலில் நடித்தவரும், இயக்குநர் பொன் ராமின் இணை இயக்குநருமான பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். அதிலிருந்து மீள்வதற்கு மற்றொரு காமெடி நடிகர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘தில்லுக்கு துட்டு’,‘சதுரங்க வேட்டை’,‘காக்கி சட்டை’,‘கருப்பன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ஐயப்பன் கோபி இன்று காலமானார். மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றா? அல்லது உடல் நலக்குறைவா? என எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.