
பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி மருத்துவராகப் பணியாற்றுகிறார். இந்நிலையில் இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் டாக்டர் பல்லவியைக் காணவில்லை புகார் கொடுத்துள்ளார்.
அதில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவிக்கும் அவரது சகோதரிக்கும் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது. இதையடுத்து கோபத்துடன் காரை எடுத்துச் சென்ற பல்லவி பிறகு வீடு திரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்லவியின் செல்போன் ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை எனக் கூறி, போலிஸார் கண்டுபிடித்து தரவேண்டும் என்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலிஸார் காணாமல் போன டாக்டர். பல்லவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், தன்னை யாரும் கடத்திச் செல்லவில்லை என்றும் தான் பத்திரமாக இருப்பதாகவும், தான் காணவில்லை என்கிற செய்தி வெறும் வதந்தி தான். அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று பல்லவி, அவரது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.