
தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், தமிழில் விஷாலின் 'துப்பறிவாளன்' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு எண்ட்ரீ கொடுத்தார்.
அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நடித்தார் அனு இம்மானுவேல். இவ்விரு படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றன.
இதில், எங்க வீட்டுப் பிள்ளை படம் காந்த கண்ணழகியாக அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.இருந்தாலும், அனு இம்மானுவேல் கைவசம் தற்போது ஒரு படம் கூட இல்லை. ரசிகர்களும் அவரை மறக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் படவாய்ப்புகளை பிடிக்கவும், ரசிகர்களின் கவனத்தை தன் மீது திருப்பவும் அதிரடியாக களறங்கியுள்ள அனு இம்மானுவேல், புதிதாக ஃபோட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பரவவிட்டுள்ளார். கருப்புநிற ஆடையில், விதவிதமான போஸ்களில் ரசிகர்களை வசீகரித்திருக்கும் காந்த கண்ணழகியின் இந்த அசத்தலான புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் லைக்குகளை அள்ளி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.