சர்கார் டீசருக்கு முதல் லைக் போட்டது நான் தான்; சந்தோஷத்தில் துள்ளும் விஜய் ரசிகர்;

Published : Oct 20, 2018, 12:35 PM ISTUpdated : Oct 20, 2018, 12:43 PM IST
சர்கார் டீசருக்கு முதல் லைக் போட்டது நான் தான்; சந்தோஷத்தில் துள்ளும் விஜய் ரசிகர்;

சுருக்கம்

இணையத்தை இப்போது கலக்கி கொண்டிருக்கும் ஹாட்டான விஷயம் சர்கார் டீசர் தான். தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணி அளவில் , இணையத்தில் ரிலீசாகி இருக்கிறது. 

இணையத்தை இப்போது கலக்கி கொண்டிருக்கும் ஹாட்டான விஷயம் சர்கார் டீசர் தான். தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணி அளவில் , இணையத்தில் ரிலீசாகி இருக்கிறது. சர்காரின் ஃபஸ்ட் லுக் ரிலீசான போதே இணையத்தை மெர்சலாக்கிய விஜய் ரசிகர்கள், டீசரை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போய் கொண்டாடி வருகின்றனர்.

சர்கார் டீசருக்கு எத்தனை ஹிட் எத்தனை லைக் என்பது தான் இப்போதைக்கு இணையத்தில் ஹாட் டாப்பிக்கே. கோடிக்கணக்கான ஹிட்டுகளை கடந்து , மில்லியனில் லைக்குகளையும் தாண்டி இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறது சர்கார் டீசர். இந்த டீசருக்கு முதல் முதலாக லைக்  போட்டது யார் என்பதை ஆதரத்துடன் வெளியிட்டிருக்கிறார் விஜய் ரசிகர் ஒருவர்.மில்லியன் லைக்குகளை கடந்து போய்க்கொண்டிருக்கும் இந்த சர்கார் டீசருக்கு முதல் லைக் போட்டது நான் தான், என தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஆதாரத்துடன் பகிர்ந்திருக்கிறார் அந்த விஜய் ரசிகர். 

தளபதி விஜயின் சர்கார் டீசர் யாரும் முறியடிக்க முடியாத அளவிற்கு சாதனை படைத்திட வேண்டும் என்பதில் ,ஆர்வமாக இருக்கும் விஜய் ரசிகர்கள் டீசர்க்கு ரிலீசுக்காக மிக ஆர்வமாக காத்திருந்தனர். அவர்களில் ஒருவருக்கு தான் முதல் லைக் போடும் இந்த லக் அடித்திருக்கிறது. இந்த லக்கிற்காகவே அந்த ரசிகரை வாழ்த்தி வருகின்றனர் சக விஜய் ரசிகர்கள்


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!