ரிலீசான 24 மணி நேரத்துக்குள்ளாக சர்கார் டீசர் ஆன் லைனில் செய்திருக்கும் சாதனை; கொண்டாடும் விஜய் ரசிகர்கள்;

Published : Oct 20, 2018, 11:54 AM IST
ரிலீசான 24 மணி நேரத்துக்குள்ளாக சர்கார் டீசர் ஆன் லைனில் செய்திருக்கும் சாதனை; கொண்டாடும் விஜய் ரசிகர்கள்;

சுருக்கம்

தளபதி விஜய் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பிற்கு இடையே நேற்று மாலை 6 மணி அளவில் சர்கார் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் சர்கார் திரைப்படத்தை காண உலக அளவில் இருக்கும் அனைத்து விஜய் ரசிகர்களுமே பேராவலுடன் காத்திருக்கின்றனர்.

தளபதி விஜய் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பிற்கு இடையே நேற்று மாலை 6 மணி அளவில் சர்கார் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் சர்கார் திரைப்படத்தை காண உலக அளவில் இருக்கும் அனைத்து விஜய் ரசிகர்களுமே பேராவலுடன் காத்திருக்கின்றனர். தளபதி படம் ரிலீஸ் என்றாலே திருவிழாவாக கொண்டாடுவிடும் விஜய் ரசிகர்கள் நேற்று ரிலீசாகி இருக்கும் டீசரையும் உச்ச கட்ட வெற்றிக்கு கொண்டு சென்றிட முன்னதாகவே திட்டமிட்டிருந்தனர்.

பொதுவாகவே ஒரு டீசர் ரிலீசாகும் போது அந்த டீசர் இணையத்தில் எந்த அளவிற்கு சாதானை படைத்திருக்கிறது என்பதை அறிந்திட அனைவருமே பேராவலுடன் காத்திருப்பார்கள், இதுவரை பிற திரைப்படங்களின் டீசர் இணையத்தில் படைத்திருக்கும் சாதனையை இந்த புதிய டீசர் முறியடிக்கிறதா என அறிந்திட அனைத்து தரப்பினருமே ஆர்வமுடன் இருப்பார்கள். இதனாலேயே சர்கார் டீசர் ரிலீசாவதற்கு முன்னதாகவே சர்கார் டீசர் ரிலீஸ் பற்றிய ஹேஷ் டேக்குகளை இணையத்தில் பிரபலப்படுத்தி இருந்தனர் விஜய் ரசிகர்கள்.

தற்போது இந்த டீசர் ரிலீசாகி இன்னும் 24 மணி நேரம் கூட நிறைவடையவில்லை. ஆனால் சர்கார் டீசர் இந்திய அளவில் உச்ச கட்ட சாதனையை செய்திருக்கிறது. வேறு எந்த பிரபல நடிகர்கரின் டீசரும் இந்த அளவிற்கு ஹிட் மற்றும் லைக் பெற்றதில்லை ஆனால் சர்கார் மிகப்பெரிய அளவிலான சாதனையை டீசர் விஷயத்தில் செய்திருக்கிறது.

இதுவரை 1.1கோடி அளவிலான ஹிட்டுகளை கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் சர்கார் டீசர், ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றிருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. வேறு எந்த பாலிவுட் நடிகரின் படமும் கூட இவ்வளவு ஹிட்களை இந்த குறுகிய காலகட்டத்தில் ரீச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!