பாஜகவில் இணையப்போகிறேனா?... பதறியடித்து விளக்கம் கொடுத்த விஷால்....!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 13, 2020, 5:32 PM IST
Highlights

சமீபத்தில் பாஜகவில் இணையும் சினிமா பிரபலங்களுக்கு பதவிகள் வழங்கப்படுகிறது. அதனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து விஷால் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் தற்போதே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. முக்கிய பிரதிகள் கட்சி விட்டு கட்சி தாவுவது என பரபரப்பான காட்சிகள் தினமும் அரங்கேறி வருகின்றனர். மற்றொரு புறம் போஸ்டர் களோபரங்கள் அரங்கேறி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தில் ஆரம்பித்து விஜய், அஜித், சூர்யா வரை அரசியலுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு நடிகர் விஷால் வெற்றி பெற்றார். இதையடுத்து அரசியலிலும் கால்பதிக்க துடித்தார். அதன்படி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தார் விஷால். ஆனால் அவரின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதனால் விஷால் அரசியலில் கால் பதிக்க ஆர்வமாய் இருப்பது உறுதியானது. 


 

இதையும் படிங்க: 

சமீபத்தில் பாஜகவில் இணையும் சினிமா பிரபலங்களுக்கு பதவிகள் வழங்கப்படுகிறது. அதனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து விஷால் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை விஷால் முற்றிலும் மறுத்துள்ளார். பாஜகவில் இணைய எல்.முருகனை சந்தித்து நேரம் கேட்கவில்லை என்றும், பாஜகவில் இணையப்போவதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

click me!