இப்ப மட்டுமல்ல எப்பவுமே ரிலீஸாகாதா தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா?’...

By Muthurama LingamFirst Published May 10, 2019, 11:58 AM IST
Highlights

மூன்று வருடங்களுக்கும் மேலாக முடங்கியிருக்கும் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’மற்று விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ ஆகிய படங்களுக்கு ஆந்திரப் பட நிறுவனம் ஒன்று கோர்ட்டில் தடை வாங்கியுள்ளது.

மூன்று வருடங்களுக்கும் மேலாக முடங்கியிருக்கும் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’மற்று விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ ஆகிய படங்களுக்கு ஆந்திரப் பட நிறுவனம் ஒன்று கோர்ட்டில் தடை வாங்கியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் 2016ல் துவங்கப்பட்ட படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. இப்படத்தை கவுதமுக்கு நெருக்கமான நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. நல்ல நிலையிலிருந்த அந்த நிறுவனம் திடீரென பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளானதால் படத்தயாரிப்புகள் நின்றுபோன நிலையில் எடுத்து முடித்திருந்த ‘எ.நோ.பா.தோ’ படத்தையும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் சில வாரங்களுக்கு படத்தை சென்ஸார் பண்ணி முடித்திருந்த நிறுவனம் படம் மிக விரைவில் ரிலீஸாகவிருப்பதாக ட்விட்டர் பதிவு போட்டிருந்தது. இதுபோன்ற பல அறிவிப்புகளை நம்பி ஏற்கனவே ஏமாந்திருந்த தனுஷ் ரசிகர்கள் ‘2025 எனை நோக்கிப் பாயும் தோட்டா’ விரைவில் ரிலீஸ் என்று மீம்ஸ் வெளியிட்டிருந்தனர்.

தற்போது அந்த மீம்ஸ் நிஜமாகும் வகையில் ‘எ.நோ.பா. தோ’வுக்கு தெலுங்குப்பட நிறுவனம் ஒன்று ஹைதராபாத் கோர்ட்டில் தடை வாங்கியுள்ளது. நடிகா்கள் விஜய் சேதுபதியின் ’சிந்துபாத்’, தனுஷின் ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகிய திரைப்படங்களை தமிழில் வெளியிட கே புரொடக்ஷன் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பாகுபலி திரைப்படத்தை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். 

அப்படி வெளியிட்ட வகையில் பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.17.60 கோடி பாக்கி வைத்துள்ளது. இதையடுத்து பாகுபலி திரைப்பட தயாரிப்பு நிறுவனமானது ஹைதராபாத் உயா்நீதிமன்றத்தில், கே புரொடக்ஷன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில் தங்களுக்கு வரவேண்டிய தொகையை திருப்பித் தராமல், கே புரொடக்ஷன்ஸ் எந்த படத்தையும் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்க கோாியது. மேலும் படத்திற்கான தொலைக்காட்சி உரிமம் உட்பட அனைத்து உரிமங்களையும் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று தொிவிக்கப்பட்டது. அதன்படி மேற்படி கோரிக்கைகளை ஏற்று இரு படங்களையும் வெளியிட ஹைதராபாத் கோர்ட் தடை விதித்தது.

click me!