எப்படி இறந்தார் தெரியுமா ஸ்ரீதேவி ? வெளி வரும் அதிர்ச்சி தகவல்கள்!!

 
Published : Feb 26, 2018, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
எப்படி இறந்தார் தெரியுமா ஸ்ரீதேவி ? வெளி வரும் அதிர்ச்சி தகவல்கள்!!

சுருக்கம்

How to sri devi expired in dubai

பிரபல நடிகை ஸ்ரீதேவி தனது உறவினரிம் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்தபோது ஏற்பட்ட அதிதீவிர மாரடைப்பால் மரணமடைந்தார். ஆனால் அவர் அங்கு எப்படி இறந்தார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஸ்ரீதேவி தனது கணவரின் அண்ணன் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 22 ஆம் தேதி போனிகபூர், இளைய மகள் குஷி கபூர் ஆகியோருடன் துபாயில் உள்ள ராசல்கைமா என்ற இடத்துக்கு சென்றார்.

அங்கு குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிகளில் ஸ்ரீதேவி உற்சாகமாக கலந்து கொண்டார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் அவரைப் பார்க்க போனி கபூர் உடனடியாக மும்பை திரும்பினார்.

கணவரையும் மூத்த மகளையும் பிரிந்திருந்த ஸ்ரீதேவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம், போனி கபூர் திடீரென ஸ்ரீதேவியிடம் சொல்லாமல் துபாய் திரும்பினார்.

போனி கபூர் ஹோட்டல் வந்தபோது அவர் தூங்கி கொண்டிருந்தார். அவரை போனி கபூர்  எழுப்பிய போது மகிழ்ச்சி அடைந்த அவர், பின்னர் குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த  திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி வெளிர் பச்சை நிறத்திலான உடை அணிந்து இருந்தார். இதுவே அவர் அணிந்த கடைசி உடையாகும்.

திருமண சடங்குகள் நிறைவு பெற்றவுடன் நடந்த இரவு உணவு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு நடனமாடினார். அப்போது அவர் தன் கணவர் போனி கபூரை அணைத்தபடி நடனமாடியதை அங்கு கலந்துகொண்டவர்கள் நினைவு கூர்ந்தனர்.

இதையடுத்து நட்சத்திர விடுதி அறைக்கு திரும்பிய ஸ்ரீதேவி, சற்று  நேரத்தில பாத்ரூம் சென்றார். ஆனால் நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், போனி கபூர், கதவைத் தட்டியிருக்கிறார்.

ஸ்ரீதேவி கதவைத் திறக்காததால் போனி கபூர் அதை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது பாத் டப்பில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடுமபத்தினர், போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு ஸ்ரீதேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே மரணமடைந்திருப்பது தெரிய வந்ததது. அவருக்கு அதிதீவிர மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்திய மக்களிள் மனதில் நீங்காத இடத்தைப்பிடித்த நட்சத்திரம், அன்பான மனைவி, பாசமுள்ள தாய் என பல பரிணாமங்களில் மிளிர்ந்த நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்ததை யாராலும் நம்ப முடியவில்லை என்பதே உண்மை.

ஸ்ரீதேவி அந்த திருமண  நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வரும்போது ஒரு வித சோகத்துடன் வருவதுபோல் வீடியோவில் காட்சிகள் பதிவாகி இருந்தது அவர் ஏற்கனவே ஏதோ ஒரு பிரச்சனையை நினைத்து வருத்தத்தில் இருந்திருக்கலாம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது
யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!