சீனிவாசன் பவர்ஸ்டார் ஆனாது எப்படி தெரியுமா? இவர்தான் காரணமாம் !

Published : Oct 08, 2022, 09:41 AM ISTUpdated : Oct 08, 2022, 03:33 PM IST
சீனிவாசன் பவர்ஸ்டார் ஆனாது எப்படி தெரியுமா? இவர்தான் காரணமாம் !

சுருக்கம்

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருமாவளவன் பங்கேற்று உள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு சீனிவாசனுக்கு பவர்ஸ்டார் என்னும் பெயரை திருமாவளவன் தான் சூட்டினார்.

சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்னும் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சீனிவாசன். இவரை பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கின்றனர். பவர் குமார் என்னும் வேடத்தில் நடித்த இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது கூட கிடைத்தது. முன்னதாக உனக்காக ஒரு கவிதை, இந்திர சேனா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தா.ர் இதில் லத்திகா என்னும் படத்தை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்தார்.  இந்த படம் மூலம் பெருத்த நஷ்டத்திற்கும் ஆளானார். இருந்தும் ஒரு வருடம் இதனை திரையரங்குகளில் ஒட்டி சாதனையை பதிவு செய்திருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தொடர்ந்து ஒன்பதிலே குரு, அழகன் , ஆர்யா சூர்யா, தலைவன் நான் சகாப்தம், சவுகார்பேட்டை, மனிதன், சக்க போடு போடு ராஜா, என்ன தவம் செய்தேனோ, நான் ரொம்ப பிசி, பேய் மாமா உள்ளிட்ட படங்களில் தோன்றினார். ஆனால் இவருக்கு காமியோவை தவிர பெரிய ரோல்கள் எதுவும் கிடைக்க வில்லை.  

மேலும் செய்திகளுக்கு... அவ ஒரு சைக்கோ சார்...ஆதாரங்களை அள்ளி வீசும் சீரியல் நடிகையின் கணவர்

இதற்கிடையே பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்த இவரை மர்ம நபர்கள் சிலர் கடத்தி வைத்திருந்து பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பல கட்சிகளுக்கு மாறி மாறி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இரண்டு திருமணம், அரசியல், படங்கள் என அடுத்தடுத்த பல சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தனக்கு பவர் ஸ்டார் என பெயர் வைத்தது யார் என குறிப்பிட்டுள்ளார் சீனிவாசன். 

அதாவது இவர் முன்னதாக நான்கு ஐந்து தொழில்கள் செய்து கொண்டு இருந்ததாகவும், தனக்கு பப்ளிசிட்டி தேவை என்பதால் நீண்ட நாட்கள் யோசித்து வந்து சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வேண்டியதாகவும் கூறியுள்ளார். பின்னர் சென்னைக்கு திரும்பி உடன் ஒரு பெண் அவரை அணுகி சினிமாவிற்கு பைனான்ஸ் பண்ண சொல்லி இருக்கிறார். ஆனால் சீனிவாசன் அதற்கு ஐடியா இல்லை என சொல்ல, நீங்கள் நேரடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பாருங்கள் என அந்த பெண் கூறி இருக்கிறார். இதை அடுத்து படப்பிடிப்பு தளத்தை நேரடியாக சென்று பார்த்த பவர்ஸ்டார் சீனிவாசன் 'லத்திகா' என்னும் படத்தை தயாரிக்கும் முடிவிற்கு வந்துள்ளார்.

இந்த படத்திற்காக பல கோடி ரூபாயை செலவிட்டுள்ளார். ஆனால் படம் தியேட்டர்களில் வெளியாகி ஒரு நாள் கூட ஓடவில்லையாம். முதல் காட்சி முடிந்ததும் இரண்டாம் காட்சிக்கு கூட ஆள் இல்லையாம். தொடர்ந்து தனது ரசிகர் மன்ற தலைவர்களை அழைத்து கூறிய போது அவர்கள், ஒரு நாளைக்கு 200 பேரை அனுப்புகிறோம். ஒரு குவாட்டரும் பிரியாணியும் கையில் 100 ரூபாயும் கொடுக்க முடியுமா எனக் கேட்டுள்ளனர். அவ்வாறு சுமார் 350 நாட்களில் அந்த படத்தை திரையரங்குகளில் ஒட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...மாடலுடன் டேட்டிங்..உண்மையை உடைத்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்

முன்னதாக நடைபெற்ற இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருமாவளவன் பங்கேற்று உள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு சீனிவாசனுக்கு பவர்ஸ்டார் என்னும் பெயரை திருமாவளவன் தான் சூட்டினார். அடுத்த நாளிலிருந்து அவர் பெயர் சீனிவாசனிலிருந்து பவர் ஸ்டார் சீனிவாசன் ஆக மாறியதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!