ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை பத்மபிரியா

Published : Oct 07, 2022, 08:45 PM ISTUpdated : Oct 07, 2022, 09:27 PM IST
ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை பத்மபிரியா

சுருக்கம்

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி உள்ளார். ஒரு தெக்கன் தள்ளு கேஸ் என்னும் மலையாள படத்தின் மூலம் மீண்டும் தனது நடிப்பு உலகிற்குள் புகுந்துள்ளார்.

சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகை தான் பத்மபிரியா ஜானகிராமன். மலையாள நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும்  பிரபலமாக இருந்தார். பரதநாட்டிய கலைஞரான பத்மப்பிரியா கடந்த 2003 சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை அடுத்து மலையாள படங்களிலும் தோன்றி வந்த இவர் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே சிறந்த பெண்  அறிமுகத்திற்கான விருதை பெற்றெடுத்தார். 

பின்னர் மலையாளத்தில் இரண்டு படங்கள் தமிழில் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தங்க மீன்கள், பிரம்மன் உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார். வெற்றி படங்களில் நடித்த போதிலும் இவருக்கு தமிழில் போதுமான வரவேற்பு கிடைக்காததால் மலையாள படங்களிலேயே அதிகமாக தோன்றி வந்தார் பத்மபிரியா.

மேலும் செய்திகளுக்கு...தாடியுடன் கேஜிஎப் நாயகன் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய கேப்டனின் மகன் சண்முகபாண்டியன்

இதற்கு இடையே கடந்த 2014 ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் ஷா என்பவரை மும்பையில் கரம் பிடித்தார். நீண்ட நாள் காதலர்களான இவரை கரம் பிடித்த பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். பள்ளி பருவத்திலேயே மிஸ் ஆந்திரா பட்டத்தை வென்ற மாடலாவார்  பத்மபிரியா. திருமணத்திற்கு பிறகும் பிறகும் பல படங்களில் நடித்து வந்த இவர் 2017க்கு பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் நடித்த சத்தம் போடாதே படத்தில் இவரது மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது.

இந்நிலையில் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி உள்ளார். ஒரு தெக்கன் தள்ளு கேஸ் என்னும் மலையாள படத்தின் மூலம் மீண்டும் தனது நடிப்பு உலகிற்குள் புகுந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...அச்சச்சோ என்ன தான் ஆச்சு ஸ்ருதிஹாசனுக்கு.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே?

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்