இது அவ்ளோ ஈசி இல்ல..ஆலோசனை மைய திறப்பு விழாவில் நடிகை சாய் பல்லவி உருக்கம்

By Kanmani PFirst Published Oct 7, 2022, 9:12 PM IST
Highlights

தற்போது ஒரு எண்ணை தட்டினால் போதும் தங்களது மன வேதனைகளை இன்னொருவரிடன் பகிர்ந்து கொள்ள முடியம். இது அவ்வளவு ஈஸி இல்லை எல்லோருக்கும் இது போய் சேர வேண்டும் என பேசி உள்ளார் சாய்பல்லவி .

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இந்திய மருத்துவ கவுன்சிலில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் மருத்துவப் பயிற்சியாளராக தன்னை பதிவு செய்துள்ளார். அதோடு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார் சாய்பல்லவி. இருந்தும் மருத்துவத்தை விட நடிப்பின் மீது அவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக நடிகை தன்னை உருமாற்றி  கொண்டார்.  முன்னதாக கஸ்தூரிமான் தாம் தூம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் சாய்பல்லவி. இதுதான் அவரது  நடிப்பு குறித்த ஆசைக்கும் காரணமாக அமைந்தது.

பின்னர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. மலர் டீச்சராக வந்து இளைஞர்களின் மனதை கவர்ந்திருந்தார் சாய்பல்லவி. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் காளி, தெலுங்கில் ஃபீடா, மிடில் கிளாஸ் அப்பாயி, தமிழில் தியா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிரேமம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தனது வயதிற்கும் நடிப்பிற்கும் சம்பந்தமே இல்லாமல் தோன்றி வந்தார்.

மேலும் செய்திகளுக்கு...ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை பத்மபிரியா

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷின் மாரி 2 படம் இவரின் வேறு ஒரு கோணத்தை பிரதிபலித்தது. இந்த படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் தான் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது என்று கூட கூறலாம். இதை அடுத்து இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே வேறு விதத்தில் அமைந்தது. என் ஜி கே, பாவ கதைகள் மற்றும் தெலுங்கில் மூன்று படம் என அடுத்தடுத்து நடித்து வந்த சாய்பல்லவி. சமீபத்தில் கார்கியில் நடித்திருந்தார். 60 வயது தந்தையை பாலியல் குற்றம் என்கிற பெயரில் காவல்துறை கைது செய்ய அந்த வழக்கில் இருந்து தன் தந்தையை எவ்வாறு நாயகி மீட்கிறார் என்பதே இந்த படத்தின் கதையாக இருந்தது. படம் வெளியாகி மிதமான வரவேற்புகளை பெற்றுயிருந்தும் சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்பு பாராட்டுக்குள்ளானது.  சூர்யாவின் 2டி நிறுவனம் தமிழ்நாட்டில் விநியோகிக்கும்  உரிமையை பெற்று இருந்தது. 

பல விருதுகளையும் தன் கைவசம் வைத்துள்ள சாய்பல்லவி, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, டி 4 உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக இவர் நாயகியாக அறிமுகமான பிரேமம் படத்தில் இவர்தான் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சமூக விழாக்களிலும் அவ்வப்போது கலந்து கொள்ளும் சாய்பல்லவி தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஆலோசனை மைய திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...தாடியுடன் கேஜிஎப் நாயகன் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய கேப்டனின் மகன் சண்முகபாண்டியன்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற இந்த விழாவில் சாய் பல்லவி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் கலந்து கொண்ட சாய்பல்லவி சிறுவயதில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இன்னொருவரிடம் கூறலாம் என்பதே மிகப்பெரிய ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்சினையை யாரிடம் தெரிவிக்க இயலாமல் மனவேதனைக்கு உள்ளாகும் பிள்ளைகளே அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஒரு எண்ணை தட்டினால் போதும் தங்களது மன வேதனைகளை இன்னொருவரிடன் பகிர்ந்து கொள்ள முடியம்.  இது அவ்வளவு ஈஸி இல்லை எல்லோருக்கும் இது போய் சேர வேண்டும் என பேசி உள்ளார்.

click me!