
'கல்யாண பரிசு' சீரியலில் நாயகனாக நடித்த ஈஸ்வரா, இப்படி ஒரு கள்ளக்காதல் விஷயத்தில் சிக்கியது என, பலருக்கும் செம்ம ஷாக். ஆனால் அது தான் உண்மை என பல ஆதாரங்களோடு போலீசார் நடிகர் ஈஸ்வரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
'தேவதையை கண்டேன்' சீரியலில் நடித்தபோது தான், மகாலட்சுமிக்கும், ஈஸ்வருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சீரியலில் மகா, வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மகா, அதே சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வரும் நடிகருடன் தவறான உறவு வைத்துள்ளார்.
நாளடைவில் அவரை விட்டு மகா விலக துவங்கியதும், இருவரும் நெருக்கமாக பழகியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து அந்த நடிகர் மிரட்டியுள்ளார். இதனால், மகாலட்சுமிக்கு உதவி செய்ய இந்த பிரச்சனைக்குள் நுழைந்தவர் தான் ஈஸ்வர்.
ஒரு வழியாக அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த மகா, நடிகர் ஈஸ்வரை ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி தன் வலையில் வீழ்த்திவிட்டார் என பகீர் தகவலை கூறியுள்ளார், ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ.
மகாலட்சுமியால் சிறு சிறு பிரச்சனையாக வெடித்த கணவன் மனைவி பிரச்சனை, தற்போது விவாகரத்து, ஜெயில் என குடும்பம் இரண்டாக பிரியும் அளவிற்கு வந்து விட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.