
தெலுங்கில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஐஸ்மார்ட் சங்கர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தி, தெலுங்கு திரையுலகில் வெற்றிக்கொடிய நாட்டிய அவர், தற்போது, ஜெயம்ரவின் பூமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.
இந்தப் படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் நிதி அகர்வால்.
அந்த வகையில், புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். செந்நிற ஆடையில் குட்டிகுட்டி க்யூட்டான முகபாவனைகளுடன் அழகில் கிறங்கடிக்கும் நிதிஅகர்வாலின் இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.
ஹோம்லி லுக்கிலும் இவ்வளவு கவர்ச்சியும் அழகுமா! என பலர் வாய்பிளந்தபடி கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.ஐதராபாத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து அங்கேயே கல்லூரிப் படிப்பை முடித்த நிதி அகர்வால், ஹிந்தி மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளையும் சரளமாக பேசுவாராம்.
அதுமட்டுமல்லாமல், பாலே, கதக், பெல்லி நடனங்களிலும் அவர் அத்துப்பிடியாம். ஆக, கவர்ச்சியுடன் திறமையும் மிக்க நடிகையாக தமிழில் அறிமுகமாகும் நிதி அகர்வால், எத்தனை ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கப் போகிறாரோ என்பது தெரியவில்லை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.