
திரைத்துறையில் ஒன்றாக நடிக்கும் நடிகர் நடிகைகளில் காதலித்து திருமணம் செய்து கொண்ட வெற்றி தம்பதிகளில் அஜீத் மற்றும் ஷாலினி மிக முக்கியமானவர்கள். இவர்களின் திருமணம் காதல் திருமணம் என்று அறிந்த பலருக்கு அந்த காதல் எப்படி ஆரம்பித்தது என்றது தெரியாது. அஜீத்தும் ஷாலினியும் அமர்க்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் அஜீத் எப்படி தன்னுடைய காதலை ஷாலினியிடம் தெரிவித்தார் என்பது தான் ஸ்பெஷல். இந்த ஸ்பெஷலான விஷயத்தை வெளியே கூறியது அமர்களம் திரைப்படத்தின் இயக்குனர் சரண் தான்.
அஜீத் ஷாலினி இந்த இருவரில் காதலை முதலில் கூறியது அஜீத் தானாம். அந்த தருணத்தை இன்னும் இனிமையாக நினைவு கூர்ந்திருக்கிறார் இயக்குனர் சரண், ஒரு நாள் ஷீட்டிங்கின் போது அஜீத் ,ஷாலினி ,சரண் மூவரும் இருக்கும் போது , சரணிடம் ”நான் என்னோட மொத்த கால்ஷீட்டையும் உங்களுக்கு கொடுத்துடுறேன் எப்படியாது சீக்கிறம் படத்தை எடுத்து முடிச்சிடுங்க.”
போற போக்கை பார்த்தா நான் இந்த பொண்ணை லவ் பண்ணிடுவேன் போல இருக்கு என ஷாலியின் முன்னால் வைத்தே சொல்லி இருக்கிறார் அஜீத். அங்கு போட்ட பிள்ளியார் சுழி தான் இன்று ஆனந்தமான போய்க்கொண்டிருக்கும் அவர்களின் காதல் வாழ்க்கையை தொடங்கி வைத்திருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.