‘அவள்’ படத்தை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் – சித்தார்த் பெருமிதம்…

Asianet News Tamil  
Published : Nov 07, 2017, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
‘அவள்’ படத்தை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் – சித்தார்த் பெருமிதம்…

சுருக்கம்

Hollywood fame applause aval movie - Siddharth

சித்தார்த் நடித்த ’அவள்’ படத்தைப் பார்த்துவிட்டு ஹாலிவுட் பிரபலம் தி கிரேட் ரிச்சர்டு கிங் பாராட்டியுள்ளாராம்.

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்துள்ள படம் ‘அவள்’.

இந்தப் படம் கடந்த 3-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளை மிரட்டி வருகிறது. இப்படம் திரில்லர் திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருப்பது போல, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒலி வடிவமைப்பு பணிகளை விஜய ரத்னம், விஷ்ணு கோவிந்த் வடிவமைத்திருந்தார்.

அந்த வகையில் படத்தின் ஒலி வடிவமைப்புக்கு ஹாலிவுட் பிரபலத்திடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது என்றுசித்தார்த் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் “ஹாலிவுட் பிரபலம் தி கிரேட் ரிச்சர்டு கிங் ‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார் சித்தார்த்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கைதி 2 கைவிடப்பட்டதா? நடிகர் கார்த்தி சொன்ன ஷாக்கிங் பதில்
Riddhi Kumar : குட்டி சிவப்பு உடையில் கிளாமர் காட்டும் ரித்தி குமார்... பார்த்தாலே பரவசமாக்கும் கிளிக்ஸ்!!