துளி கூட தலைக்கனம் இல்லாத தல – புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகை…

 
Published : Aug 12, 2017, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
துளி கூட தலைக்கனம் இல்லாத தல – புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகை…

சுருக்கம்

Hollywood actress praised ajith who is not has pride single drop

விவேகம் படத்தில் நடித்து வரும் ஹாலிவுட் நடிகை அமிலா, துளி கூட தலைக்கனம் இல்லாத நடிகர் அஜீத் என்று அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விவேகம். இந்தப் படத்தை ஹாலிவுட் வட்டாரமே சர்வதேச தரத்தில் இயக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படம் என்று புகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஹாலிவுட் நடிகை ஒருவர் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ள்ளார்.

பல படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்த பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ‘தி நவம்பர் மேன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக்.

இவர்தான் ‘விவேகம்‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு, ரிஸ்கான சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து அமிலா, “இயக்குனர் சிவா மற்றும் அஜீத்துடன் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். அஜீத்தை முதன்முதலில் சந்தித்தபோது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையான மனிதராக எல்லோருடனும் பழகியதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவருடைய தொழில் பக்தியை இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை” என்று அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!