
ஜி படபடப்பிடிப்பின் போது பெரிய நடிகரான அஜீத்தை நான் கலாய்த்தபோது அதை மிகவும் சாதரண்மாக எடுத்துக் கொண்டார் என்று நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நடிகர் சூரி செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்தார். அதில். தான் இந்த நிலைமைக்கு வர எந்தளவு கஷ்டப்பட்டிருப்பேன் என்பதையும், முதல் படத்திலேயே அஜீத்தை கலாய்த்தது குறித்தும் மனம் திறந்து பேசினார்.
லிங்குசாமி இயக்கத்தில் ‘ஜி’ படத்தில் அஜீத் நடித்தார். அந்தப் படத்தில் காமெடி நடிகர் சூரியும் நடித்துள்ளார். ஆனால், படத்தில் இரண்டு காட்சிகளில்தான் நடித்துள்ளார்.
அந்தப் படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்திருப்பார் சூரி. படப்பிடிப்பில் ஒரு காட்சியின்போது அஜீத்தை சூரி கலாய்த்ததாகவும் கூறினார்.
ஒரு பெரிய ஹீரோவான அஜீத் தன்னை கலாய்த்ததை சாதாரணமாக எடுத்துக் கொண்டு தன்னுடைய நடிப்பைப் பாராட்டினார். மேலும், இயக்குனர் லிங்குசாமி ‘நீ பெரிய ஆளாக வருவாய்’ என்று அப்போதே என்னை வாழ்த்தினார்.
மேலும், சினிமாவில் தற்போது உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அது சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன்தான். அவரை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்’’ என்று மன நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.