மதக்கலவரத்தை தூண்டிய பீட்டா.... பதிலடி கொடுத்த ஹிப் ஹாப் ஆதி....!!!

 
Published : Jan 20, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
மதக்கலவரத்தை தூண்டிய பீட்டா.... பதிலடி கொடுத்த ஹிப் ஹாப் ஆதி....!!!

சுருக்கம்

தன்னுடைய பாடல் முதல், நடித்து வரும் படம் வரை நான் ஒரு தமிழன் என்கிற உணவர்வை அனைத்து செயல்களிலும் வெளிப்படுத்தி வருபவர் ஹிப் ஹாப்  ஆதி, அதே போல ஜல்லிக்கட்டு விஷயத்திலும்  முதலில் குரல் கொடுத்த சினிமா நட்சத்திரம் ஹிப்ஹாப் ஆதி தான். 

தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்காக இளைஞர்கள் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று தொடர்ந்து நான்கு நாட்களாக மெரினாவில் இவரும் போராடி வருகிறார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு  ஆதரவாக  தமிழகம் முழுவதும் இன்று  பல கடைகள் அடைதும், வாகனங்களை ஒட்டாமலும், பள்ளி கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்தும் பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் தமிழர்கள் .

 இந்நிலையில் பீட்டா அமைப்பிலிருந்து மதச்சண்டையை ஏற்படுத்தும்படி ஒரு டுவிட் செய்தியை பதிவு செய்தனர். பின் அதை ஒரு சில நிமிடங்களில்  டெலிட் செய்துவிட்டனர்,  தற்போது அதற்கு ஒருவர் கொடுத்த ரீப்லேயை சுட்டிக்காட்டி ஆதி பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது மதம் என்று சொன்னவுடன் மதி இழந்துவிடுவோம் என்று நினைத்தாயோ. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகத்துக்கே எடுத்துரைத்த இனமடா. உன் சகுனி வேலை எங்கள் நாட்டில் செல்லாது. என கூறியுள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!