‘பீட்டா’ கொடுத்த விருதை நினைத்து வெட்கப்படுகிறேன் - நடிகர் தனுஷ் ஆவேசம்

 
Published : Jan 20, 2017, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
‘பீட்டா’ கொடுத்த விருதை நினைத்து வெட்கப்படுகிறேன் - நடிகர் தனுஷ் ஆவேசம்

சுருக்கம்

விலங்குகள் நலவாரிய அமைப்பான பீட்டா, எனக்கு சைவ உணவு பிரியர்களுக்கான விருது வழங்கியதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியின் போது, மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று குற்றம்சாட்டி, பீட்டா, இந்திய விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால், தொடர்ந்து 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டுபோட்டி நடத்தமுடியாமல்  உள்ளது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அவசரச்சட்டம் பிறப்பிக்க கோரி வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு சினிமா துறையினர் உள்ளிட்ட பலபிரிவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது-

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளி நாகரீகத்தில் மனிதனும், காளையும் இணைந்தே உழைத்ததே அறிய முடிகிறது. ஜல்லிக்கட்டு தடை என்பது, ஒரு இனத்தின் அடையாளத்தை, பன்பாட்டை அழிக்கும் செயல்.

 இந்திய சுதந்திரப்போராட்டத்தை படித்து இருக்கிறேன், ஆனால், இப்போதுதான் தமிழ் இளைஞர்களின் வீரமிக்க எழுச்சிப் போராட்டத்தை பார்த்து இருக்கிறேன். அறவழியில் போராடும் தமிழக இளைஞர்களின் செயலைப் பார்த்து தலை வணங்குகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 2012ம் ஆண்டு பீட்டா அமைப்பு எனக்கு சைவம் சாப்பிடுவதற்காக, ஹாட்டஸ்ட் வெஜிட்டேரியன் விருது வழங்கியது. ஆனால்,அந்த விருதை நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன், வருத்தப்படுகிறேன்.

நானோ, எனது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களோ பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை. நாங்கள் பீட்டாவில் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்று யாராவது கூறினால் அது வீண் வதந்தி. காட்சிப்பட்டியலில் இருந்து காளையின் பெயரை நீக்கி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!