Gehana Vassisth | வெப் சீரியஸ் என்ற பெயரில் ஆபாச வீடியோ; சிக்கிய ஹிந்தி நடிகை கெஹானா வசிஸ்த்!!

Kanmani P   | Asianet News
Published : Nov 24, 2021, 08:09 AM IST
Gehana Vassisth |  வெப் சீரியஸ் என்ற பெயரில் ஆபாச வீடியோ;   சிக்கிய ஹிந்தி நடிகை கெஹானா வசிஸ்த்!!

சுருக்கம்

நடிகைகளை ஏமாற்றி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக பிரபல பாலிவுட் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஆபாச படங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் மும்பை மலாடு மத் தீவில் உள்ள ஒரு பங்களாவில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆபாச படத்துக்காக வீடியோ எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

விசாரணையில் திரைப்பட பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள நடிகைகளை தேடி கண்டுபிடித்து வெப் சீரியஸ்கள் என்ற பெயரில் ஆபாச படங்களில் நடிக்க வைத்தது தெரியவந்துள்ளது.

அதோடு சிக்கிய 5 பேரும் கொடுத்த வாக்குமூலத்தின் படி பிரபல இந்தி நடிகை கெஹானா வசிஸ்த் இந்த விகாரத்தில் சிக்கியுள்ளார். L Lag Gaye, Unmaad, Sakshi உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ள கெஹானா, விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் கெஹானா 2012-ம் ஆண்டு மிஸ் ஆசிய பிகினி அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர்

தனக்கு சொந்தமான  வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் போன்றவற்றிற்கு ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதற்காகவே சொந்தமாக ஆபாசப் படம் தயாரித்து வந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இது போன்று ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ரூ.15,000 முதல் 20,000 வரை சம்பளம் கொடுக்கப்படுவத்துள்ளனர். பட வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகளை தங்கள் வலையில் விழவைக்கும் இந்த கும்பல் வெப்சீரிஸ் என்ற பெயரில் ஆபாச படங்கள் எடுத்து வந்துள்ளனர். 

இது தொடர்பான விசாரணையில் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆபாசப் படம் எடுத்துவிட்டதாக மாடல் அழகி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், போலீசாரிடம் பிரபலங்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாகவும், அதில் சந்பந்தப்பட்டவர்கள் பெயர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!