
கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல், அடுத்ததாக இயக்கிய படம் ஜெய் பீம். இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். இதில் மணிகண்டன், ரெஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தாலும், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த தமிழ், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு கிளம்பியது.
இதையும் படியுங்கள்... அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்... வலிமை சுமாரான படம் தான் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி
ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிபடுத்தியதற்காக நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதற்காக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மீதான வழக்கில் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.