
நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், மீண்டும் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் நடிகர் திலீப்.
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் ஜூலை 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, திலீப்பின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது நீதிமன்ற காவல் 60 நாட்களை கடந்து விட்டதாகவும் தன் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த அங்கமாலி நீதிமன்றம், நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.
ஏற்கெனவே, இரு முறை உயர் நீதிமன்றத்திலும், இரு முறை அங்கமாலி நீதிமன்றத்திலும் என, திலீப் ஜாமீன் கோரி தாக்கல் செய்த 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில், 3வது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இன்று மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் திலீப். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம், வரும் செப். 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. மேலும், ஏற்கெனவே இரு முறை தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்களே இருந்தால் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும், வேறு ஏதேனும் காரணம் குறிப்பிடப் பட்டால் மட்டுமே மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.