காயத்ரி ரகுராம் குடும்பத்தை கேவலப்படுத்திய ஆரவ்?

 
Published : Sep 19, 2017, 04:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
காயத்ரி ரகுராம் குடும்பத்தை கேவலப்படுத்திய ஆரவ்?

சுருக்கம்

arav damaged gayatri raguram family members

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் மிகவும் குறைவாக உள்ளதால் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். சண்டை சச்சரவுகள் எப்போதாவது தான் பிக் பாஸ் வீட்டிற்குள் எட்டிப் பார்க்கிறது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி 'அது இது எது' என்கிற நிகழ்ச்சியையும் ஒளிபரப்பி வருகின்றனர். அதில் சிரிச்சா போச்சி என்கிற பகுதியில் குழுக்களாக சிலர் இணைந்து, மற்ற நிகழ்ச்சியை வைத்து காமெடி செய்து பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளனர்.

அப்படி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சர்ச்சைக்குள்ளான ஒரு நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை'. இதில் 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா' என்கிற வார்த்தையை வைத்து கிண்டல் செய்ததில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் கோர்ட் வரை சென்று வந்தார். 

இந்த நிகழ்ச்சியில் காமெடி செய்த சிங்கப்பூர் தீபன் போலவே... ஆரவ் என்னமா இப்படி பண்றீங்களே மா... மற்றும் போலீசில் பிடிச்சி கொடுத்துடுவேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் போலவே ஸ்கூப் செய்து பேசிக்காட்டி பிந்துவை சிரிக்க வைத்தார். 

அதே போல நடன இயக்குனர் கலா மற்றும் அவருடைய தங்கை பிருந்தா நடுவராக இருந்த 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் எப்படி பேசுவார்களோ அதே போல் பேசி கிண்டலடித்தார். எழுத்து நின்று நடித்துக் காட்டி சிரிக்க வைத்தார்.

இவர் கிண்டலடித்தது,  கலா மற்றும் பிருந்தா ஆகிய இருவரையும்தான்! பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய காயத்ரி ரகுராமன் சித்திகள் இவர்கள் இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சமூகத்தினரை மையப்படுத்தி காயத்ரி பேசினார் என்றும், நடிகர் சக்தி தவறாக நாயனம் வாசித்தார் என்றும் இரு போட்டியாளர்கள் மேல் புகார் பாய்ந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன், கலா மற்றும் பிருந்தாவை இவர் கலாய்த்து பேசியதால் ஆரவ் மீது எதாவது புகார்கள் பாயுமா என பொறுத்திருந்து பாப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ
பாதியிலேயே நின்ற 'ஹாப்பி எண்டிங்': ஆர்.ஜே. பாலாஜி எடுத்த அதிரடி முடிவு! என்ன ஆனது அந்த படம்?