ஜெயலலிதாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் கோவர்தன் காலமானார்!

 
Published : Sep 19, 2017, 02:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
ஜெயலலிதாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் கோவர்தன் காலமானார்!

சுருக்கம்

Jayalalitha favorite music director pass away

பழைமையான பாடல்கள் பலவற்றுக்கு தன்னுடைய ஆர்மோனிய இசையால் உயிரூட்டியவர் இசையமைப்பாளர் கோவர்தன். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான இசையமைப்பாளர்.

இதனை ஜெயலலிதாவே ஒரு முறை இவருக்கு அரசு உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கிய போது, நேரடியாகவே கோவர்தனிடம் கூறியுள்ளார்.

கோவர்தன் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களான காதல் மன்னன்  ஜெமின் கணேசன், ஜெய் சங்கர், சிவாஜி, முத்துராமன் என பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.வி, பாலசந்தர், இளையராஜா, தேவா என பலருடனும் பணியாற்றியிருக்கிறார்.

தென்னிந்திய அளவில் ஆர்மோனியம் வாசிப்பதில் கைதேர்ந்தவர் என அனைவராலும் பாராட்டப்பட்ட கலைஞரான இவர், சிவாஜியின் புதிய பறவை படத்தில் ரீ ரெக்கார்டிங் செய்துகொண்டிந்த போது மின்சாரம் தாக்கியதால் காது கேட்கும் திறனை இழந்தார். அதற்குப் பின் செவித் திறன் முற்றிலும் பறி போனதால் விதி இவரை திரையுலகை விட்டே முற்றிலும் ஒதுக்கச் செய்துவிட்டது.

90 வயதான இவர் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில், குகைப்பாலம் என்னும் பகுதியின் தன் மனைவி மற்றும் குடும்பதோடு  வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று  உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவர் உயிர் பிரிந்தது. இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று அவருடைய சொந்த ஊரான சேலத்திலேயே நடக்கிறது.  மறைந்த கோவர்தனுக்கு  திரையுலகைச் சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிலம், நீர், காற்று, பணம்-எல்லாத்துக்கும் மதிப்பு கூடிக் கொண்டே போகுது: - மிரட்டலாக வெளியான ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட டீசர்!
அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ