
'சிந்து சமவெளி' படத்தில் அறிமுகமான நடிகர் ஹரீஷ் கல்யாண், அந்தப் படத்தைத் தொடர்ந்து 'பொறியாளன்' மற்றும் 'வில் அம்பு' ஆகிய படங்களில் நடித்து, வளர்த்து வரும் நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஹரீஷ் கல்யாண், எப்படியாவது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியே தீர வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். மேலும் ரசிகர்களிடம் பல முறை என்னை இந்த வாரம் எலிமினேட் செய்துவிடுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டும்கூட , மக்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து, வையாபுரியை எலிமினேட் செய்தனர்.
இந்நிலையில் தற்போது என்னால் இங்கு இருக்கவே முடியவில்லை என்று கூறும் ஹரீஷ், வையாபுரி வெளியில் சென்றதை நினைத்து தேம்பித் தேம்பி அழுகிறார். இவருக்கு சுஜா, பிந்து, சினேகன் மற்றும் கணேஷ் ஆகியோர் ஆறுதல் கூறுகின்றனர்.
அப்போது நான் இதுவரை அதிகமாக எதற்கும் கஷ்டப்பட்டது இல்லை, நான் வளர்ந்த விதம் அப்படி. ஆனால் அதையும் மீறி என்னை மிகவும் அதிகம் பாதித்தது என்றால் "நான் ஒரு பெண்ணை விரும்பினேன், அந்தக் காதல் பிரேக் அப் ஆனபோது ஒரு வருடத்திற்கும் மேல் கஷ்டப்பட்டேன். அதுதான் என் வாழ்க்கையில் அதிகப்படியாக நான் சந்தித்த கஷ்டமான தருணம்” என்று தன்னுடைய காதல் தோல்வி பற்றிக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.