
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன்தான் ஏ.ஆர்.ரகுமான். அப்பாவின் மூலம் ஏ.ஆர்.ரகுமானுக்கு சின்ன வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தாலும், அவர் கனவு கண்டது என்னவோ கம்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று தான்.
தந்தையின் மறைவிற்கு பிறகு குடும்பம் கடினமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. எனவே இளம் வயதிலேயே ரூட்ஸ் என்ற ஒரு சிறிய இசைக்குழுவில் கீபோர்ட் ப்ளேயராக இணைந்த ரகுமான், பிரபல ட்ரம்மர் சிவமணி மற்றும் அவரது நண்பர்கள் ஜான் ஆண்டனி, சுரேரோஜா படத்தில் துளிர் விட்ட, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை, ரசிகர்கள் மனதை பூரிக்கவைக்கும் பல பாடல்களால் தற்போது வரை நனைத்து வருகிறது. இவருக்கு ரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான்.ஷ் பீட்டர்ஸ், ஜோஜோ மற்றும் இளையராஜா ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார்.
இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வயதில் காத்ரி என்ற மதகுருவின் வழிகாட்டுதலின் படி திலீப் குமார் ஏ.ஆர்.ரகுமானாக மதம் மாறினார். ரோஜா படத்தில் துளிர் விட்ட, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை, ரசிகர்கள் மனதை பூரிக்கவைக்கும் பல பாடல்களால் தற்போது வரை நனைத்து வருகிறது. இவருக்கு ரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான்.
கடந்த 1991-ம் ஆண்டு லியோ காபி விளம்பரத்துக்கு போட்ட மெட்டுக்கு அவார்ட் வாங்கினார் ரகுமான். அந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்தினத்தை சந்திக்க, அதன் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தது. இவரின் இசைக்கு கிடைத்த பரிசு என்றால் அது விருதுகள் தான். அந்த வகையில் 2 ஆஸ்கார், 6 தேசிய விருதுகள், 21 பிலிம்பேர் விருதுகள், 2 கிராமி விருது, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது என என்னிலடங்கா விருதுகளை பெற்றுள்ளார்.
இசையுலகின் அரசனாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி ஏ ஆர் ரகுமான் பிறந்தநாள் ஸ்பெஷலாக HBAR அறக்கட்டளை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் சுதந்திரமான இசை சமூகத்தை மையமாகக் கொண்ட புதிய NFT இசைத் தளத்திற்கான உள்ளடக்கத்தை உருவாக்கவும், அதற்கான நிதி திரட்டுவது உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.