
21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இஸ்ரேலின் எய்லாட் நகரில் நடந்த கண்கவர் போட்டியில் மிஸ் யுனிவர்ஸ் 2021 இல் அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. பஞ்சாப்பைச் சேர்ந்த Harnaaz Sandhu கிரீடத்தை தட்டி சென்றுள்ளார். முதல் மூன்று இடத்திலிருந்த பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியாளர்களை வீழ்த்தி கிரீடத்தை வென்றார். உலகளவில் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முன்னதாக நீச்சலுடை சுற்றில் ஹர்னாஸ் சந்து முதல் 10 இடங்களுக்கு முன்னேறினார். முதல் மற்றும் இரண்டாம் இடத்தை முறையே பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பெற்றன. முதல் மூன்று சுற்றுகளின் ஒரு பகுதியாக, போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்து அரையிறுதி, மற்றும் முதல் மூன்று போட்டியாளர்களின் ஒருவராக Harnaaz Sandhu நுழைந்தார். பின்னர் கடைசி நொடி தித்திக்கிடையே இந்தியாவை சேர்ந்த Harnaaz Sandhu மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி செல்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உணர்ச்சி வசப்பட்ட Harnaaz Sandhu கண்ணீருடன் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு லாரா தத்தா அந்தப் பட்டத்தை வென்றார். இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
"
1994 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் யூயுனிவெர்ஸ் போட்டியில் சுஷ்மிதா சென் முதன்முறையாக மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.