
பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இளவரசியே... ப்யூட்டி குயினுக்கு வாழ்த்து சொன்ன அபிஷேக் பச்சன்...!
46 வயதை எட்டியுள்ள ஐஸ்வர்யாராயின் அழகும், இளமையும் இன்னும் குறையவே இல்லை.‘ஜுன்ஸ்’ படத்தில் துறுதுறுவென பார்த்த அதே ஐஸ்வர்யாராயின் க்யூட் ஸ்மையில் இன்று வரை மாறவே இல்லை. அல்டிமேட் ஸ்டாராக இந்தி திரையுலகில் இன்றளவும் வலம் வரும் ஐஸ்வர்யா ராய் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சோசியல் மீடியாவும் ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அபிஷேக் பச்சன் எப்போதும் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்துவார்.
அந்த வகையில் இந்த ஆண்டு பிறந்தநாளை செம கலக்கலாக கொண்டாட திட்டமிட்டுள்ள ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடி மகள் ஆராத்யாவுடன் இத்தாலி சென்றுள்ளனர். காதல் நகரமான இத்தாலியில் தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்து கூறியுள்ள அபிஷேக் பச்சன் அதை செம திரில்லிங்காக செய்துள்ளார். ரோம் நகரின் பிரம்மாண்ட அழகின் பேக்டிராப்பில், தங்க நிற உடையில் சிண்ட்ரல்லா போல ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அபிஷேக் பச்சன். ரோம் மொழியில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளவரசியே என காதல் பொங்க பதிவிட்டுள்ளார்.இந்த பாலிவுட் காதல் ஜோடி, இத்தாலியில் உள்ள வாடிகன் நகரை 3 நாட்கள் சுற்றிப் பார்க்க திட்டமிட்டுள்ளனர்.
ஐஸ்-க்குப் பிறகு எத்தனையோ பேர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டாலும், இந்திய ரசிகர்களின் நெம்பர் ஒண் பேவரைட் அழகி அவர் மட்டுமே. இன்றளவும் இன்ஸ்டாகிராமில் போடப்படும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ள தவறுவது இல்லை. ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாளை முன்னிட்டு #HappyBirthdayAishwarya என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்திய திரையுல பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சோசியல் மீடியா மூலம் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்த உள்ளார் ஐஸ்வர்யா ராய்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.