Mark antony movie : இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் -ம் இருக்காருப்பா.விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைத்த படக்குழு

By Kanmani PFirst Published Jan 12, 2022, 5:54 PM IST
Highlights

Mark antony movie : சமீபத்தில் வெளியான விஷாலின் மார்க் ஆண்டனி பட போஸ்டரில் விஷால் படத்துக்கு பதில் ஜிவி பிரகாஷின் படம் இடம்பெற்றுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது ஜீவியும் இந்த படத்தில் இணைந்துள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. 

துணை இயக்குனராக  திரையுலகில் காலடி எடுத்து வைத்து பின் கதாநாயகனாக மாறியவர் விஷால். இவரின், உயரம், வெயிட், போன்றவை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கு ஏற்ற போல் உள்ளது என அவரை நடிகராகும்படி நடிகர் அர்ஜுன் ஊக்குவித்ததை தொடர்ந்து நாயகன் அவதாரம் எடுத்தார் விஷால்.

ஆரம்பத்தில் இவர் நடித்த செல்லமே, சண்டை கோழி, திமிரு போன்ற படங்கள் வெற்றிப்படமாக அமைந்தது. பின் பல படங்களில் வரிசையாக கமிட் ஆகி நடிக்க துவங்கினார். படிப்படியாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஷால்.

தற்போது இவர் கைவசம் து.ப.சரவணன் இயக்கிய வீரமே வாகை சூடும் படம் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது. இதுதவிர துப்பறிவாளன் 2, லத்தி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறி பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். 

அந்த போஸ்டரை தான் தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஏனெனில், அந்த போஸ்டரில் விஷால் படத்துக்கு பதில் ஜிவி பிரகாஷின் படம் இடம்பெற்றுள்ளதே அதற்கு காரணம்.

இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவது என்னவென்றால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷிடம் ஒரு கதையை சொல்லி ஓகே செய்ததாகவும், பின்பு ஒருசில காரணங்களால் அப்படத்தில் ஜி.வி.யால் நடிக்கமுடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக தயார் செய்யப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பெயர் மாற்றி அப்படியே விஷால் படத்துக்காக வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த நெட்டிசன்கள், மண்டமேல இருக்க கொண்டைய மறந்துட்டீங்களே... என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்போது ஜீவியும் இந்த படத்தில் இணைந்துள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. அதில் மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!