
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சூரரை போற்று' திரைபடம் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் தற்போது படக்குழு இறங்கியுள்ளது. சமீபத்தில் இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'வாடி வாசல்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தற்போது தணிந்துள்ள நிலையில், மத்திய - மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது சூர்யா நடித்து வரும் 'வாடி வாசல்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.. வி கிரியேஷன் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது.
ஆனாலும் அந்த படத்தின் வியாபார வேலைகளை தயாரிப்பாளர் தாணு தொடங்கிவிட்டார். இந்த படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் சேனலுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம். ஓடிடி உரிமைக்காக 50 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.