
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்தவர் கௌதமி.
80 களில், ரஜினி ,கமல், விஜயகாந்த் என முன்னனி நடிகர்களுடன் நடித்து முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தவர்.
1998 ஆம் ஆண்டு சந்தீப் பாத்தியா என ஒரு தொழிலதிபர் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடம் மட்டுமே நீடித்து பின்பு 1999ல் விவாகரத்தில் முடித்து.
அப்போது ஒரு நண்பராக கௌதமி மனதை தேற்றியவர் கமல் என்பது குறிப்பிடதக்கது.
பின்பு மார்பக புற்றுநோய் காரணமாக, மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்ற போது ஒரு நல்ல நண்பராக அவரது மனதை தேற்றி உயிர் கொடுத்தவர் கமல்.
கௌதமி கேன்சர்ரில் இருந்து மீண்ட பிறகு தான், இருவரும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர். இப்போது கௌதமி முழு உடல் நலத்தோடு இருப்பதற்கு முக்கிய காரணம் கமல் என்று கூட சொல்லலாம்.
தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலைக்கு கௌதமி உயர காரணம், கமல் கௌதமிக்கு கொடுத்த ஊக்கமும் ஒரு காரணம், மேலும் உயிர் கொடுத்த கமலை கௌதமி பிரிவதாக வெளியிட்டுள்ள செய்தி பல திரையுலகினரை அதிர்ச்சியாக்கி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.