
நடிகை கௌதமி 90 களில் ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவர் சினிமா துறையில் இருந்தபோதே நடிகர் கமலஹாசனை காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
பின் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, 'சந்தீப் பாத்தியா' என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். திருமணமான ஒரே வருடத்தில் கணவருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து பெற்று தன்னுடைய மகள் சுப்பு லட்சுமியுடன் தனியாக வசித்து வந்தார்.
இதனை தொடர்ந்து, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட கௌதமி, சிகிச்சைக்காக இந்தியா வந்தபோது மீண்டும் நடிகர் கமலஹாசனுடன் பழக தொடங்கினார். ஒரு நிலையில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரே வீட்டில் 9 வருடங்கள் வசித்து வந்தனர்.
மேலும் திடீரென இருவரும் தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பிரிந்து வாழ போவதாக அறிவித்து தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஊடகம் ஒன்று கௌதமி மீண்டும் ஒரு பிரபல நடிகரை காதலித்து வருவதாக தகவலை பரப்பியது. அது வேறு யாரும் இல்லை நடிகர் கமல்ஹாசன் மீது தான். இதனால் இருவரும் தினமும் ஒரு மணி நேரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர் என கூறியது.
இதற்கு நடிகை கௌதமி ட்விட்டர் மூலம் தன்னுடைய அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.. அதில் "முட்டாள்தனமான உரையாடல்" மற்றும் நாய்கள் குறைப்பது போல் உள்ளது என்றும் வேறு ஏதாவது விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என மிகவும் கோபமாக ட்விட் செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.