30 புகைப்படங்களில்... மூன்றாயிரம் அழகிய நினைவுகள்! காஜல் அகர்வாலுக்கு கணவரின் ரொமான்டிக் பிறந்தநாள் வாழ்த்து!

Published : Jun 19, 2021, 07:04 PM IST
30 புகைப்படங்களில்... மூன்றாயிரம் அழகிய நினைவுகள்! காஜல் அகர்வாலுக்கு கணவரின் ரொமான்டிக் பிறந்தநாள் வாழ்த்து!

சுருக்கம்

காதல் மனைவி நடிகை காஜல் அகர்வாலின் 36 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 30 ரொமான்டிக் புகைப்படங்களை பகிர்ந்து, அழகிய நினைவுகளுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் கெளதம் கிச்சுலு.  

காதல் மனைவி நடிகை காஜல் அகர்வாலின் 36 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 30 ரொமான்டிக் புகைப்படங்களை பகிர்ந்து, அழகிய நினைவுகளுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் கெளதம் கிச்சுலு.

அஜித், விஜய், என தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களுடனும், அதே போல் தெலுங்கிலும் டாப் ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்த நிலையில், திடீர் என தன்னுடைய நீண்ட நாள் காதலர் கெளதம் கிச்சிலுவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார் காஜல். அதன் படி இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மிக பிரமாண்டமாக நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தங்களுடைய காதல் மற்றும் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார் காஜல்.  மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். 

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் கணவருடன் சேர்ந்து முதல் முறையாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். நேற்று இரவு முதலே காஜலுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், காஜலின் கணவர் மிகவும் வித்தியாசமாக தன்னுடைய ரொமான்டிக் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காஜலுடன் பல சமயங்களில் ஒன்றாக எடுத்து கொண்ட 30 காதல் ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு, அதில் 30 ஆயிரம் நிறைவுகள், சந்தோஷங்கள் ஒளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு