ஷங்கர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடி இவரா..? ஹீரோயின் பற்றி வெளியான தகவல்..!

Published : Jun 19, 2021, 05:40 PM IST
ஷங்கர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடி இவரா..? ஹீரோயின் பற்றி வெளியான தகவல்..!

சுருக்கம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்க உள்ள படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்க உள்ள படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவர் லைகா நிறுவனத்திற்காக இயக்கி வந்த 'இந்தியன் 2 ' படம் இழுபறியாக இருக்கும் நிலையில் அடுத்த அடுத்த படங்களை இயக்க தயாராகி வருகிறார்.

அதன்படி இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகார பூர்வ தகவல் வெளியானது..

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது. பின்னர் தற்போது 'இந்தியன் 2 ' பிரச்சனை மீண்டும் சூடுபிடித்ததை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க ராம் சரண் தயக்கம் தெரிவித்ததாகவும், 'இந்தியன் 2 ' சர்ச்சை முடிவுக்கு வந்த பிறகே ஷங்கர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் சில தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், ராம் சரணுக்கு ஜோடியாக ஷங்கர் படத்தில் நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியான தகவலா? அல்லது வழக்கம் போல் வதந்தியா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு