திட்டமிட்டு சிக்க வைத்தார்கள்... போதை மருந்து வழக்கு குறித்து பரபரப்பை ஏற்படுத்திய ராகினி திவேதி!

By manimegalai aFirst Published Jun 19, 2021, 3:02 PM IST
Highlights

பெங்களூருவில் கடந்த ஆண்டு  போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 

பெங்களூருவில் கடந்த ஆண்டு  போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. இந்த விசாரணையின் முடிவில்,  ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர் அவர் போதை மருந்துகள் வைத்திருந்தது உறுதிசெய்யப்படவே. பெண் போலீசார் உட்பட 7 பேர் கொண்ட குழு நடிகை ராகினி திவேதியை கைது செய்தனர்.

இந்நிலையில் பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 மதத்திற்கு பின் ஜாமினில் வெளியே வந்தார்.  மேலும் இந்த வழக்கு தொடர்பாக180 சாட்சியங்களை விசாரித்த பிறகு, 2400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள நிலையில் தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.

நடிகை ராகினி தற்போது பெங்களூரில் உள்ள, விஜயாபுரா பகுதியில் திருநங்கைகளுக்கான ரத்ததானம் மற்றும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, போதை மருந்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்க்கு பதில் அளித்தார்.

இதுகுறித்து பேசியுள்ள ராகிணி தான் ஒரு பெண் என்பதால் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 
இந்த சமூகத்தில் பெண்களை எளிதில் வீழ்த்திவிட முடியும். ஒரு பெண் வெற்றியுடன் உள்ளார் என்றால் அவரை வீழ்த்த பல முயற்சிகள் நடக்கிறது. என் விஷயத்திலும் என்னை குறி வைத்துதான் பல சம்பவங்கள் நடந்துள்ளது. 

எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் பகிர்ந்து ட்ரெண்ட் செய்தார்கள். திட்டமிட்டு என்னை சிக்க வைத்தார்கள். ஆனால், எனக்கு அவர்களைப் பற்றி தெரியாத நிலையில், நான் ஏன் அதுகுறித்து கவலைப்பட வேண்டும்? எனக்கான தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள் எனவே விரைவில் இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

click me!