ஆஸ்கர் வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்கு... ஆளுநர் தமிழிசை வாழ்த்து!

By manimegalai a  |  First Published Mar 13, 2023, 12:58 PM IST

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் ஆர் ஆர் ஆர் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
 


95-ஆவது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள டால்பி தியேட்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் உலகில் அளவில் தலைசிறந்த சினிமா கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்தியா சார்பில் நடிகை தீபிகா படுகோன் கலந்துகொண்டு விருது பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில்,  இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், இடம்பெற்றது, நாட்டு நாட்டு  பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் செல்லோ சோ என்கிற குஜராத்தி திரைப்படமும். ஆல் தட் ப்ரீத் மற்றும் எலிபேன்ட் விஸ்பர்ரஸ் என்கிற ஆவணப் பாடமும் இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

Breaking : நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு... சரித்திரம் படைத்தது ஆர்.ஆர்.ஆர்

இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆர் ஆர் ஆர்  படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆஸ்கர் விருதை,  இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அப்பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது இதையடுத்து  திரைபிரபலன்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பல ஆஸ்கர் விருது வென்ற ஆர் ஆர் ஆர் படக்குழுவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் தன்னுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஊட்டிப் பெண் இயக்கத்தில்... தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது - யார் இந்த கார்த்திகி?

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "நாட்டு நாட்டு" பாடலின் மூலம் ஆஸ்கர் விருது வென்று, உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர் ஆர் ஆர் திரைப்பட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் 'தி ஸ்லம்  டாக் மில்லியனர்' படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு ஆஸ்கர் விருதை வென்றிருந்தாலும், தென்னிந்திய படத்திற்கு முதல்முறையாக ஆஸ்கர் விருது பெரும் இசையமைப்பாளர் இசையமைப்பாளர் என்கிற பெருமை கீரவாணிக்கு வந்து சேர்ந்துள்ளது.  

"நாட்டு நாட்டு" பாடலின் மூலம் ஆஸ்கார் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் திரு. அவர்களையும், pic.twitter.com/ImiOS0xXwR

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv)

 

click me!