முகம் காட்டாமல் மகள் செய்யும் உதவி..! அப்பா கவுண்டமணியை பெருமைப்பட வைத்த சுமித்ரா..!

By Kanimozhi Pannerselvam  |  First Published Feb 5, 2021, 10:38 AM IST

அப்படித்தான் கவுண்டமணியின் மகள் சத்தமில்லாமல் செய்து வரும் உதவிகளும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களாக பலர் வந்தாலும், ஜாம்பவன் என்ற பட்டம் சிலருக்கு மட்டுமே பொருந்தும். அதில் முக்கியமானவர் 90களில் தமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆட்சி செய்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், புரட்சித் தமிழன் சத்யராஜ் என படத்தின் நாயகர்கள் யாராக இருந்தாலும் அந்த படத்தில் காமெடி நாயகனாக கண்டிப்பாக கவுண்டமனி இருப்பார். 90களில் கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் இல்லாத படங்களை பார்ப்பது என்பதே அரிது. 

Tap to resize

Latest Videos

அப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவுண்டமணி ஒருபோதும் தன்னுடைய குடும்பத்தை லைம் லைட் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது இல்லை. அப்படித்தான் கவுண்டமணியின் மகள் சத்தமில்லாமல் செய்து வரும் உதவிகளும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட கவுண்டமணிக்கு சுமித்ரா, செல்வி என இருமகள்கள் உள்ளனர். இதில் சுமித்ரா பல ஆண்டுகளாக செய்து வரும் உதவி குறித்து தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை அடையாறு அரசு புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி ஒவ்வொரு மாதமும் உதவி வருகிறது. இதுவரை அவர்கள் யார் என்கிற விபரம் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது. இப்போது அவர்கள் யார் அவர்கள் என்பது தெரிய வந்து காப்பகத்தில் இருப்பவர்களே நெகிழ்ந்து விட்டனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுவது வேறு யாரும் அல்ல நடிகர் கவுண்டமணியின் மகள்  சுமித்ராவும், அவரது கணவர் வெங்கடாசலமும் தான் என்பது தெரியவந்துள்ளது. தம்பதி தாங்கள் யார் என்பதை துளியும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சேவையாற்றி வருவது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

click me!