'அறம்' படத்திற்காக கொடுத்த விருதை திரும்பி ஒப்படைக்கிறேன்; இயக்குனர் கோபி நயினார் அதிரடி!

Published : Mar 21, 2025, 05:20 PM ISTUpdated : Mar 21, 2025, 05:27 PM IST
'அறம்' படத்திற்காக கொடுத்த விருதை  திரும்பி ஒப்படைக்கிறேன்; இயக்குனர் கோபி நயினார் அதிரடி!

சுருக்கம்

நடிகை நயன்தாராவை வைத்து, சமூக அக்கறை கொண்ட 'அறம்' படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, கோபி நயினார் இந்த படத்திற்காக கொடுத்த விருதை திரும்பி ஒப்படைப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தின் கதை தன்னுடையது என கூறிய பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் இயக்குனர் கோபி நயினார். இந்தியா தொடர்ந்து, நடிகை நயன்தாராவை ஹீரோயினாக வைத்து, 2017-ஆம் ஆண்டு வெளியான 'அறம்' படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த நிலையில், ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்த குழந்தையை எப்படி மீட்பு முழு மீட்கின்றனர். அதற்க்கு ஒரு மாவட்ட ஆட்சியர் எந்த அளவுக்கு துணை நிற்கிறார் என்பதே இதன் கதைக்களமாக இருந்தது. 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்திற்கு திராவிடர் கழகம் விருது அளித்து பாராட்டியது. இந்த நிலையில் இந்த விருதை திருப்பி அளிப்பதாக தற்போது, 'அறம்' பட இயக்குனர் கோபி நயினார் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன். தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது.

இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது. தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன் தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை.இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் இந்திய முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது.

நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!