
அஜித் நடித்து சமீபத்தில் ரிலீசான விடாமுயற்சி படம் பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் குட் பேட் அக்லி படம் பற்றி செம தகவல் ஒன்றை அந்த படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரே தெரிவித்துள்ளார்.
டைரக்டர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத், த்ரிஷா நடித்த விடாமுயற்சி படம் பிப்ரவரி 06ம் தேதி ரிலீசானது. அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். விடாமுயற்சி படம் சூப்பர் என அஜித் ரசிகர்கள் சொன்னாலும், பொதுவான ரசிகர்களின் கருத்து வேறாக உள்ளது. "விடாமுயற்சி, வழக்கமான அஜித் படம் போல் இல்லை. பெரிய ஹீரோவான அஜித் ஏன் இது போன்ற சாதாரண கேரக்டர்களில் நடிக்கிறார்?" என்று தான் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இருந்தாலும் ரசிகர்களின் தொடர் ஆதரவுடன் விடாமுயற்சி, தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விடாமுயற்சி படம் ரிலீசான முதல் நாளில் ரூ.26 கோடி வசூலை பெற்றாலும் அடுத்த நாளில் இது அப்படியே பாதியாக குறைந்தது. விடாமுயற்சி படம் முதல் நான்கு நாட்களில் ரூ.51 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. முதல் வாரத்தில் ரூ.100 கோடி கிளப்பில் கூட இணையவில்லை என்பது அஜித் ரசிகர்களின் மிகப் பெரிய கவலையாக உள்ளது. ஆனால் 2023ம் ஆண்டு அஜித் நடித்த "துணிவு" படம் முதல் வாரத்திலேயே ரூ.200 கோடிகளை வசூல் செய்திருந்தது. துணிவு படத்தின் சாதனையை விடாமுயற்சி முறியடிக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போய் உள்ளனர்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக "குட் பேட் அக்லி" என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும்? விடாமுயற்சி தவற விட்ட வசூல் சாதனையை குட் பேட் அக்லி கைப்பற்றுமா? என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பா்த்துக் கொண்டிருக்கையில் அஜித் ரசிகர்கள் செமயாக கொண்டாடி தீர்க்கும் அளவிற்கு மாஸ் அப்டேட் ஒன்றை குட் பேக் அக்லி படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான சுப்ரீம் சுந்தர் வெளியிட்டுள்ளார்.
விடாமுயற்சி படம் பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸ் குறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்திருந்த சுப்ரீம் சுந்தர், "விடாமுயற்சி வழக்கமான தல படம் போல் இல்லை என சிலர் கூறுகிறார்கள். இந்த படத்தில் வாவ் என சொல்லும் அளவிற்கு எந்த விஷயமும் இல்லை என்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எதை எல்லாம் விடாமுயற்சி படத்தில் நீங்கள் மிஸ் செய்தீர்களோ அதை விட 10 மடங்கு அதிகமான விஷயங்கள் குட் பேட் அக்லி படத்தில் இருக்கிறது. நீங்கள் குட் பேட் அக்லி படத்திற்கு போனால் உங்களுக்கு கண்டிப்பாக விக்ஸ், ஹால்ஸ் தேவைப்படும். ஏன்னா? கத்தி கத்தியே உங்களுக்கு தொண்டை வலி வந்து விடும். குட் பேட் அக்லி படம் முழுவதுமே வாவ் தருணங்களாக தான் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரே இப்படி ஒரு விஷயத்தை சொல்லி விட்டதால் அஜித் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். ஸ்டன்ட் மாஸ்டர் சொன்ன தகவல் தான் தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. இதனால் #GoodBadUgly ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள். குட் பேட் அக்லி படத்திற்கு இப்போதே பலரும் வாழ்த்து கூற துவங்கி விட்டனர். இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். ஏப்ரல் 10 தேதி குட் பேட் அக்லி ரிலீஸ் என சொல்லப்பட்டிருந்தாலும், அஜித்தின் பிறந்த நாளான மே 01 ம் தேதிக்கு கூட படக்குழு ரிலீசை தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.