
நான் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன்..! சூர்யா குடும்பத்தினருக்கு இப்படி ஒரு நிலைமையா..?
நடிகர் சூர்யாவிற்கு தென்னிந்தியாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் வைத்துள்ளார்.மிக சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
ஆனால் சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா. ஸ்டுடியோ கிரீன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்
இந்த நிறுவனத்தின் கீழ் தான் நடிகர் சூர்யா பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஞாவேல்ராஜா, தெலுங்கில் எல்லா நடிகர்களின் படங்கள் ரூ100 கோடி வரை ஷேர் கிடைக்கிறது.
ஆனால் ரூபா.15 கோடி சம்பளம் தெலுங்கில் கிடைக்கின்றது.ஆனால் தமிழில் ரூ.50 கோடியாக உள்ளது. மேலும், எடுத்த அனைத்து படமும் நஷ்டம் தான் அடைகிறது. எனவே ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என பேசி உள்ளார்.
அப்படி இல்லை என்றால் நான் தமிழகத்திலிருந்து தெலுங்கு பக்கம் சென்று விடுவேன் என ஆதங்கமாக தெரிவித்து உள்ளார்.
விஷால் அணியின் சார்பாக வெற்றி பெற்று, தயாரிப்பாளர் செயலாளராக இருந்த ஞாவேல்ராஜா, விநியோகஸ்தர்கள் தரப்பிலும் தங்களது அதிகாரத்தை நிறுவுவதற்காக, செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களின் விநியோகஸ்தர் சங்கத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
மேலும் தமிழ் சினிமா நடிகர்கள் வாங்கும் அதிகமான சம்பளம் காரணமாகத்தான் தான் தெலுங்கு சினிமா பக்கம் போக இருப்பதாக தெரிவித்து உள்ளார் ஞானவேல்ராஜா.
தெலுங்கு சினிமாவில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கு. நான் ஏற்கனவே அங்கு அலுவலகம் திறந்து விட்டேன்.
விரைவில் நடையை கட்ட உள்ள உள்ளேன் என ஞாவேல்ராஜா தெரிவித்து உள்ளார்.மேலும் தமிழ் சினிமாவில் சிலரோட சுயநலம் தான் எல்லாத்துக்கும் தடையாக இருக்கிறது. இதில் நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.