பிரபல இயக்குனர் தூக்கு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி...! திரையுலகில் பரபரப்பு...!

 
Published : May 17, 2018, 03:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
பிரபல இயக்குனர் தூக்கு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி...! திரையுலகில் பரபரப்பு...!

சுருக்கம்

famous director rajasimha try to sucide

பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா, சினிமாவில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமா அதிக அளவு தூக்கு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளவர் ராஜசிம்ஹா. குறிப்பாக நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் இவர் தான்.

மேலும் கடந்த நடிகை நித்யா மேனன், மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான 'ஒக்க அம்மாயி' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

 

இந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை.

இந்நிலையில் இவர், மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் இவரை உடனடியாக மருத்துவனையில் அனுமதித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். 

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, சினிமாவில் ஏற்ப்பட்ட பிரச்சனை காரணமாக 'ராஜசிம்ஹா' மன அழுத்தத்தில் இருந்ததாகவும். இதனால் திடீர் என இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது