பள்ளிக்கு புதிய கட்டுப்பாடு - மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு

By manimegalai aFirst Published Jun 19, 2019, 5:45 PM IST
Highlights

அரசு பள்ளியில் இறைவணக்கம் செலுத்துவதற்கு, மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாடு விதித்துள்ளார். இதனால், கல்வி ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

அரசு பள்ளியில் இறைவணக்கம் செலுத்துவதற்கு, மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாடு விதித்துள்ளார். இதனால், கல்வி ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலையில் பள்ளி துவங்கும் முன், இறைவணக்கம் செலுத்துவார்கள். மழை காலங்களாக இருந்தாலும், மாணவர்கள் வரிசையில் நின்று தமிழ்த்தாய் வாழ்த்து, இறைவணக்கம் செலுத்துவது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட கல்வி முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டு இருப்பதாவது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தினமும் பள்ளி தொடங்குவதற்கு முன், அப்பள்ளியின் வளாகத்தில் இறைவணக்கம் செலுத்துவது வழக்கம். இனி வரும் காலங்களில் திங்கட் கிழமைகளில் மட்டும், பள்ளி வளாகத்தில் இறைவணக்கம் செலுத்த வேண்டும்.

மற்ற நாட்களில், வெளியே நடத்த வேண்டாம். அந்தந்த வகுப்பறையில் நடத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலரின் இந்த அறிக்கை, கல்வி ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

click me!