பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்...! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை...!

 
Published : Jun 23, 2018, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்...! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை...!

சுருக்கம்

give cinema chance They are invited to bed for sexual abuse

தமிழில், காந்தர்வன், சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை ஹனிரோஸ், தற்போது இவர் கொடுத்துள்ள பேட்டியில் மலையாள திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கையறைக்கு நடிகைகள் அழைக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் பாலியல் தொல்லை:

சமீப காலமாகவே அனைத்து திரையுலகை சேர்ந்த நடிகைகளும், பட வாய்ப்பு கொடுப்பதற்காக சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். சில நடிகைகள் இதனை தைரியமாக வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

ஸ்ரீரெட்டி:

அந்த வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகைகளை படுக்கைக்கு அழைத்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் ஆகிய பலரது பெயரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்ய அரசும் , மகளிர் ஆணையமும் இறங்கி உள்ளது.

மலையாள பட உலகிலும் பாலியல் தொல்லை:

இந்நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் மலையாள பட உலகிலும் சினிமா படங்களில் வாய்ப்பு கொடுக்க நடிகைகள் பலர் படுக்கை அறைக்கு அழைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியில்...

"மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் கையில் தான் உள்ளது. நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராடத்தான் வேண்டி இருக்கிறது. அப்போது சிலர் நடிகைகளை மூளைச்சலவை செய்வார்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இவர் நடித்த ஒன் பை டூ என்ற படத்தில் இவர் முத்த காட்சியில் நடித்ததை படக்குழுவினர் விளம்பரத்துக்கு பயன்படுத்தியது வேதனையாக இருக்கிறது என ஹனிரோஸ் மிகவும் மன வேதனையோடு கூறியுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ