திரையுலக வாழ்க்கை எப்படி? மனம் திறந்த நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ்...!

 
Published : Jun 23, 2018, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
திரையுலக வாழ்க்கை எப்படி? மனம் திறந்த நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ்...!

சுருக்கம்

rithika srinivas about her cinema carrier

'வழக்கு எண் 18/9', 'நிமிர்ந்து நில்', 'மாஸ்' ஆகிய படங்களில் ஆகிய முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா  ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ். இவர் தாற்போது வெளியாகியுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பதிரத்தில் நடித்துள்ளார். 

கூத்துப்பட்டறையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் இந்த திரைப்படம் குறித்தும் தன்னுடைய திரையுலக வழக்கை பற்றியும் ரசிகர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்...

டிக் டிக் டிக் திரைப்படம்:

"இந்த மாதிரியான படம் இந்தியாவின் ஏன் ஆசியாவின் முதல் விண்கல படம் என்றும் சொல்லலாம். நாங்க ரொம்ப கஷ்ட பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். இது ரொம்ப சவாலான படம் என்பதால் இதில் நடிக்க நாங்கள் ரொம்பவும் ஆர்வமாக இருந்தோம். என் பங்கும் இந்த படத்தில் முக்கிய பங்காக இருக்கும். விண்கல அமைப்புக்கு போடப்பட்ட செட் ரொம்ப உண்மை தன்மையோடு இருந்தது. ஒவ்வொரு விஷயமும் நுணுக்கமாகவும் நம்பக தன்மையோடவும் போட்டிருந்தார்கள். கலை இயக்குனர்.

இயக்குனர் சக்தி சிதம்பரம்:

ஐந்து நாள் குறிப்பிட்ட செட்டில் வேலை செய்தோம். ஒவ்வொருவரும் ரொம்ப என்ஜாய் பன்னி அவங்க  வேலையை செய்தார்கள். சக்தி சார் ரொம்ப தெளிவா ஸ்கிரிப்டை வைத்துள்ளார். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் விளக்கமா சொன்னதால் எல்லாம் லைவ்வா இருந்தது அதனால் நான் ரொம்ப மெனக்கெடல் இல்லாமல் ஈசியாக நடித்தேன்.

வரவேற்பை பெற்ற ட்ரைலர்:

படத்தில் ஜெ.பி சார் வரும் சீன் எல்லாமே  ரொம்ப சூப்பரா இருக்கும். டப்பிங் பன்னும் போதே படம் இதயத்தை தொடும் அளவு இருந்தது. ட்ரைலரில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. படம் பொது மக்களால் எதிர்பார்க்க படுவதால் பெரும் வரவேற்பை தரும் என நம்புகிறேன். எந்த படமாக இருந்தாலும் திரையரங்கில் மட்டுமே மக்கள் படத்தை பார்க்க வேண்டும். இந்த படத்துக்கு ஹாலிவுட் அளவுக்கு பட்ஜெட் இல்லை எங்களால் என்ன முடியுமோ அதை தான் செய்திருக்கிறோம். தயவு செய்து அதை புரிந்து கொண்டு படத்துக்கு ஆதரவு தாருங்கள். 

ஜெயம் ரவி எப்படி:

'டிக் டிக் டிக்' க்கு அடுத்து நான் இரண்டு மலையாளம்  படத்தில் கமிட் பன்னிருக்கேன். வெப் சீரீஸ்லயும் கூப்பிட்டு இருக்காங்க. ஆரவ், அவரை தினமும் செட்டில் பார்ப்பேன் அவர் மிக நன்றாக நடிக்கிறார். ஜெயம் ரவி ரொம்ப டெடிக்கேட்டான நடிகர் என்று கூறியுள்ளார்.

திரையுலக அனுபவம்:

எனக்கு வரும் படங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுவேன். எவ்வளவு நேரம் திரையில் என் கதாபத்திரம் வரும் என முக்கியமில்லை. அம்மாவா நடிக்கிறேனா இல்லை பொண்ணாக பன்றேனா என்பது முக்கியம் இல்லை அந்த கதையை ஒட்டி நான் இருக்கின்றேனா என்பது தான் முக்கியம். அந்த படத்தில் நான் ஐந்து நிமிடம் வந்தாலும் என் பாத்திரம் ஆகிருக்கனும் அப்படி ஆகலைன்னு தோனுச்சினா ஐயோ இப்படி ஒரு படம் பன்னிருக்கோமே என்று தோனும். நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் ஹோம் வோர்க் பன்னுரது, டயலாக் முன்னாடியே பார்த்து மனப்பாடம் பன்னுறது இதுலாம் பன்ன மாட்டேன். ரொம்ப ரிகர்சல் பன்னிட்டா உண்மை தன்மை இருக்காது.

கனி சார் ஆன் ஸ்பார்டில் எழுதுபவர். மாஸ் மாதிரி படங்களில் என்ன என்ன பன்னனும் எப்போது குழந்தையை பார்த்து அழ வேண்டும் என அந்த சீன் எப்போம் வரும் என்று கேட்டுக்கொள்வேன்.மற்றபடி படங்களில் இயக்குனர்  சொல்றபடி தான் நடிப்பேன். நிமிர்ந்து நில்,வழக்கு எண் இதுலாம் இதையம் தொட்ட படங்கள் ஏனென்றால் எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது.  ஆயிரத்தில் இருவர் அந்த படமும் எனக்கு நன்றாக அமைந்தது. என் குடும்பதில் எல்லாருக்கும் பிடித்த படம் என்றால் அது வழக்கு எண் தான். பாலாஜி சக்திவேல் ஒரு நேஷனல் அவார்டு வாங்கிய இயக்குனர். என் குழந்தைகளுக்கு மாஸ் படம் ரொம்ப பிடிக்கும். நான் விஜய், அஜித்தோட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கனும் என்று இல்லை யார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் நல்லது தான் என்று கூறியுள்ளார் ரித்திகா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்