
ஜியோ MAMI மும்பை திரைப்பட விழா 2018 நிகழ்ச்சியில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" என்கிற திரைப்படத்திற்காக பாலின சமத்துவ (Gender Equality Award) விருதைப் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20வது மும்பை திரைப்படவிழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 01) முடிவடைந்தது.
இந்தத் திரைப்படவிழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்திற்காக, 'பாலின சமத்துவ' (Gender Equality Award) பிரிவில் SPACIAL JURY MENTION விருது "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்காக இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.